Wednesday, April 13, 2011

The name is Bond. Tamil Bond (poem for New Year)

ஆண்டு ஆண்டு பழுத்து கிழத்த கலைஞருக்கும் புத்தாண்டு
மாண்டு மாண்டு தோய்ந்து போன தொண்டருக்கும் புத்தாண்டு
சாடிசாடி அரசை நாண்ட அம்மாவுக்கும் புத்தாண்டு
அவள் காலைத்தொட்டு வணங்கி நின்ற அமைச்சருக்கும் புத்தாண்டு
ஓடியாடி உலகைவென்ற டோனியருக்கும் புத்தாண்டு
அழகிப்பட்டம் ஆசைப்பட்ட சோனியருக்கும் புத்தாண்டு
வயலில் வாடி பயிரை வளர்த்த உழவருக்கும் புத்தாண்டு
அயல் நாடு சென்று கணினி வென்ற இளைஞருக்கும் புத்தாண்டு
மாதர் தம்மை ஒங்க வைத்த "பெமினி"யார்க்கும் புத்தாண்டு
அச்சம் நாணம் மடம் பயின்ற அம்மணிக்கும புத்தாண்டு
மாணவரை ஞானவராக்கும் முனைவருக்கும் புத்தாண்டு
இந்தப்பட்டியலில் விட்டுப்போனஅனைவருக்கும் புத்தாண்டு

வாழ்க வாழ்க என்று கூறி இறைவனை நாம் வேண்டுகிறோம்
புது ஆண்டு உம்மை நன்று வைக்க தமிழை வைத்து "பாண்டு"கிறோம்


(c) N. Madhavan, 2011